Thursday, November 11, 2010

இன்று சூரன்போர்

இன்று சூரன்போர். ஆணவச் செருக்குக் கொண்ட சூரனை வதம் செய்யும் நாள்.ஆணவம் கொடியது. ஆண்டவனை ஆன்மா பற்றிப்பிடிப்பதற்கு அதுவே தடை. ஆகையால் ஆணவம் அழிக்கப்படவேண்டும் என்பதால் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தான்.

சூரனை வதம்செய்வதற்கு முன்னதாக தனது சேனாதிபதி வீரபாகுதேவரை தூது அனுப்புகிறான். தூது தோல்வியில் முடிகின்றது. தன் திருப்பெரும் வடிவத்தையும் முருகன் சூரனுக்குக் காட்டுகின்றான்.முருகப் பெருமானின் விஸ்வரூபத்தை காட்ட சூரன் திகைக்கிறான். கூப்பிய கரத்தினனாய் உச்சிமேற் கையைத் தூக்கித் தொழுகின்றான்.

ஆணவச் செருக்குடைய சூரன் மட்டுமே கந்தப்பெருமானின் திருப்பெருவடிவத்தை காணும் பேறுபெற்றான்.அகந்தை அழியாமலே ஆண்டவனின் திருப் பெருவடிவத்தைக் கண்டனுபவித்த பெருமை சூரனுக்கே உண்டு. ஆகையால் சூரன் நல்லவன், உயர்ந்த சிந்தனை உள்ளவன் என்பது தெளிவாகின்றது.

எனினும் கந்தபுராணம் தந்த கச்சியப்பரும் கந்த புராணத்தில் சூரனை நல்லவனாகக் காட்ட முற்பட்டிலர். அதற்கும் காரணமுண்டு. கச்சியப்பரின் காலப்பகுதியில்இ ஆணவம் கொண்டோரே கேடுவிளை விப்பவர்களாக இருந்தனர். அதனால் கச்சியப்பர் சூரனை நல்லவனாகக் காண முற்படவில்லை.

No comments:

Post a Comment