Saturday, August 21, 2010

சோளங்கன் நூல் நிலையம்

சோளங்கன் நூல் நிலையம் கரணவாய் மேற்கு கிராமசேவகர் பிரிவில் உடுப்பிட்டியை தேர்தல் தொகுதியாகவும், கரவெட்டியை தபால் பிரிவாகவும் கொண்டுள்ளது. விவசாய கிரமமான சோளங்கனில் திராட்சை, புகையிலை, வெங்காயம்,மிளகாய் போன்ற பயிர்களை  பிரதானமாக கொண்ட விவாசய கிரமமாகும். இவ் கிரமத்தில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், கரணவாய் மகாவித்தியாலயம் என்பனவற்றையும், சுறுட்டு தொழிற்சாலை, திராட்சை பண்ணை என்பனவற்றையும் கொண்ட கிராமமாகும்.

அருகே இயற்றையாக உப்பு விளையும் உப்பு கடலையும் கொண்ட பகுதியாகும். இவ் பகுதியில் அதிகமானவர்கள் விவசாயிகள் ஆவர். அரச உத்தியோகம் பார்ப்பவர்கள் குறைவு. 1982ம் ஆண்டு இப் பகுதியில் சோளங்கள் சன சமூக நிலையம் எனும் நூல் நிலையம் ஊர் இளைஞர்களான கங்காதரன்,குணராசா போன்றவர்களின் முன்னெடுப்பினால்  உருவாக்கப்பட்டது. நூல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்படி இளைஞர்கள் முன்னெடுத்தபோது, அதனை அமைப்பதற்கான நிலம் இல்லாத நிலையில் கந்தவனம் முருகேசு(சபா) அவர்கள் அதற்கான காணியை வழங்கி  இளைஞர்களின் துடிப்புமிக்க கிராம முன்னேற்றத்திற்கு வழியமைத்து கொடுத்தார்.

இதன் அயல் கிரமாங்களாக கல்லுவம், மண்டான், கரணவாய் தெற்கு கிராமங்கள் உள்ளன. நகருக்கு செல்வதாக இருந்தால் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள நெல்லியடி பட்டினசபைக்குத்தான் செல்லவேண்டும். வைத்தியசாலையாக இருந்தால் பருத்தித்துறையில் அமைந்துள்ள மந்திகை அரசினர் வைத்தியசாலைக்கு செல்லவேண்டும். இவ் கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் இந்து சமயத்தை வழிபாடாக கொண்டவர்கள். இங்கே பிற மதத்தினர் கிடையாது. ஆலய வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட சோளங்கன் கிராம மக்கள் ஆலயத்திற்காக பெருமளவு நிதியை செலவழித்து கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

இவ் கிராமத்தில் வசித்துவந்தவர்களில் கணிசமானை இளம் வயதினர் உள்நாட்டு யுத்தம் காரணமாக வெளிநாடுகளிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ் கிராமத்தில் அபிவிருத்தி என்றும் பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. தொடர்ந்தும் கிரமாத்தை அபிவிருத்தி செய்து, எதிர்கால சமுதாயத்திற்கு நல்வாழ்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சோளங்கன் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு தமது சனசமூக நிலையம் ஊடாக சமூக மேம்பாட்டிற்காக உழைத்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் இருந்தாலும் ஊர் அபிவிருத்திக்காக எந்தவொரு உதவியும் அவர்களிடம் இருந்து கிடைக்காத நிலையில், உள்ளூரில் சேகரிக்கும் நிதியை கொண்டு கிரமாத்தை மேம்படுத்தும் நிலையில், துடிப்பு மிக்க இளைஞனாக தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய நூல் நிலையத்தின் தலைவர் திகழ்கின்றார்.

தொடரும்….

No comments:

Post a Comment