உடுப்பிட்டி வன்னிச்சை அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடியமை குறித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸில் முறையிட்டிருந்தார்.
இது குறித்த விசாரணைகளில் ஈடுபட்டு வந்த பொலிஸார் நீண்ட விசாரணையின் பின்னர் 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 16 வயது உடைய இவர்கள் பிரபல பாடசாலை ஒனறில் க.பொ.ச பிரிவில் கல்வி கற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்ளில் இருவர் வல்வெட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கம்பர்மலை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவருவதுடன். சும்பந்தப்பட்டவர்கள் அவர்களது வீடுகளில் வைத்து நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment