Sunday, January 17, 2016

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்-2016 மேஷம்,ரிஷபம்!!!



 மேஷம்


mesham
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த 2016 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புரியாத புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும். சாதகமான தீர்ப்புகளும் வரும். உங்களைச் சுற்றி நடந்த சூழ்ச்சிகள் தானாகவே விலகும் அதிசயங்களைக் காண்பீர்கள். மனதில் தெளிவுடன் சிந்தித்து வாழ்க்கைப் பாதையை சீர் செய்து கொண்டு சாதனைகள் படைப்பீர்கள். பிரபலஸ்தர்களின் நட்பினால் புதுப்பொலிவுடன் வலம் வருவீர்கள். உங்களின் காரியங்களை அடுத்தவர்களின் உதவியின்றி தனித்தே செய்து முடிப்பீர்கள். உதாரணக்குணத்தால் உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திறமைக்கேற்ற தொழில்களில் ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். மேலும் உடலாரோக்கியமும் சிறக்கும். நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த நோய்களிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியுண்டு. அவர்கள் சரியான பாதையில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக இருப்பீர்கள்.


ஆகஸ்டு மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மாறுபட்ட கருத்துள்ளவர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் புகழ் கூடும். உடன்பிறந்தோர் வகையில் சில செலவுகள் உண்டாகும். புனித ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். மகான்களின் ஆசிகளும் கிடைக்கும். பங்குவர்த்தகம் ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சிறிய லாபங்களும் அவ்வப்போது கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் உங்களின் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். புதியவர்களிடம் பூசி மெழுகாமல் வெளிப்படையாக பேசி எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களாலும் நன்மைகள் உண்டாகத் தொடங்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்துசேரும் காலகட்டமென்றால் மிகையாகாது.

maha laxsmi-bw
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் தொய்வு இல்லாமல் நடக்கும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமையை மேலும் வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பர். மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வர். வீடுகட்ட கடன்களும் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் இருப்பர். பணவரவுக்கு குறைவு வராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கள் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் செயல்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். சமுதாயதத்தில் மதிப்பு மரியாதைகள் அதிகரித்து அந்தஸ்து உயரும். புதிய சந்தைகளை தேடிப்பிடித்து அங்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கூட்டாளிகளிடம் எதையும் மனம்திறந்து பேசவேண்டாம். புதிய முதலீடுகளைச் செய்யவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு நன்மை அடைவர். 


நீர்பாசன வசதிகளை பெருக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகளை இந்த காலத்தில் தவிர்த்திடுங்கள். புதிய உபகரணங்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து பயிர் செய்யுங்கள். உடல் நலம் சீராக இருக்கும். உற்சாகத்துடன் உழைப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். கட்சிமேலிடம் உங்கள் பணியாற்றும் திறனைப் பாராட்டும். உட்கட்சிப் பூசலிலிருந்து விலகி இருப்பீர்கள். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு இருக்கும். சிறிய தடங்கலுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் வரவேற்பும் அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதேசமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதியைக் காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்களையும் வாங்குவர். மாணவமணிகள் கேளிக்கைகளில் கவனம் செலுத்தாமல் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபட்டால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களிடம் சுமுகமாகப் பழகவும். பெற்றோரும் ஆசிரியர்களும் ஆதரவு தருவர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

ரிஷபம்

rishabamரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
இந்த 2016 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் தேவையான உதவிகளைச் செய்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அதை உங்களின் முன்கோப பேச்சுகளால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும். அரசு வகையில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். மற்றபடி குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். குறிக்கோளை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களைப் பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எதிர்பாராத பல நன்மைகள் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும்.

ஆகஸ்டு மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் நிர்வாகத் திறமை கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். உங்கள் ஆத்மசக்தியால் மனதைக் கட்டுப்படுத்தும் மறைமுகக் கலைகளில் தேர்ச்சிப் பெறுவீர்கள். நஷ்டம் வரும் என்று நினைக்கும் விஷயங்களில் ஈடுபட மாட்டீர்கள். நண்பர்களின் பொறாமைகளுக்கும் அலட்சியங்களுக்கும் ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செயல்களில் அலட்சியங்கள் இருந்தாலும் திட்டமிட்டு பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். உடலாரோக்கியமும் சிறப்பாக இருக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

GoddessDurga (20)உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை. விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பர். கால்நடைகளின் மூலம் நல்ல லாபத்தைப் பார்ப்பர். புதிய நிலங்களை வாங்கி எதிர்காலத்தைச் செம்மையாக்க முயல்வீர்கள். உங்கள் உடலுழைப்பிற்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். சந்தையில் போட்டிக்குத் தக்கவாறு நடவடிக்கை எடுப்பீர்கள். சிலர் புதிய விவசாய உபகரணங்களையும் வாங்குவர்.

அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ஆனாலும் ஒப்பந்தங்களை முடித்து நற்பெயரை எடுப்பர். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவர். செயல்களைச் சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும். செயல்களில் முழுத்திறமையையும் பயன்படுத்துங்கள். பெண்மணிகளை குடும்பத்தினர் மதிப்புடனும் கௌரவத்துடனும் நடத்துவர். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ற சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் காணப்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம். மாணவமணிகள் முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.

No comments:

Post a Comment