தனக்கு குழந்தை பிறக்கப்போவதையொட்டி இருமாத
விடுமுறை எடுக்கப்போவதாக ஃபேஸ்புக்கின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்
தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் நிறுவன பணியாளர்கள் குழந்தை பிறப்பை ஒட்டி நான்கு மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை எடுத்துக்கொள்ள முடியும்.
இதனை ஒரே தவணையிலோ, அல்லது குழந்தையின் ஒரு வயது நிறைவுக்குள்ளோ அவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதாக மார்க், கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.
தான் விடுமுறையில் இருக்கும் காலத்தில் தனது பணிகளை யார் கவனிக்கப் போவது என்பது குறித்து மார்க் எதுவும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment