வடமராட்சி மணற்காட்டு பகுதியில் விடுதலை புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் தங்க நகை புதையலை தோண்டிய நால்வர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுதுறையினர் என்று கூறிக்கொண்டு அதிசொகுசு கார்கள் இரண்டில் வந்து மணற்காட்டு கடற்கரை பகுதியில் புதையல் தோண்டியுள்ளனர். இவர்கள் மீது சந்தேக கொண்ட அவ் கிராம மக்கள் அவர்களை விசாரித்தபோது தாம் புலனாய்வு பிரிவினர் என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் கிராமசேவகர் மற்றும் பொலிஸாருக்கும் முறையிட்டுள்ளனர்.
தகவலை தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்தபோது, புதையல் தோண்டியோர் தாம் வந்திருந்த சொகுசு கார்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளனர். இவர்களை பின்தொடர்ந்த பொலிஸார் அவர்கள் வந்திருந்த கார்களில் ஒன்றினை மண்டான் பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
அவ் காரில் இருந்த நால்வர் கைது செய்யப்பட்டனர் அவர்களின் மூவர் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரியவருகின்றது.
புதையல் ஒன்று அப்பகுதியில் இருப்பதாக வெளிநாட்டில் இருந்து கிடைத்த தகவலை தொடர்ந்தே தாம் புதையலை தோண்டியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையாகவே அப்பகுதியில் புதையல் இருக்கின்றதா என்பது குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment