நாசாவை சேரந்த ஆராய்ச்சியாளர் தயாரித்திருக்கும் சிறிய வை-பை சிப் ஸ்மார்ட்போன்களின்
பேட்டரியை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப் நாசாவை சேர்ந்த அட்ரியான்
டாங் என்பவர் கண்டறிந்திருக்கின்றார். லாப்டாப் பேட்டரி சட்டுனு தீர்ந்துடுதா, அப்ப
இதை படிங்க.
இந்த வை-பை சிப் வயர்லெஸ் போன், கம்ப்யூட்டர் மற்றும் அணிய கூடிய கருவிகளில்
மற்ற ரிசீவர்களை விட 100 சதவீதம் குறைந்த சக்தியை பயன்படுத்துகின்றது. இந்த அலுமினியம்
பேட்டரி 60 நொடிகளில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும்.
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ரவுட்டர் அனுப்பும் சிக்னலை பிரதிபலிக்கும் இந்த சிப்
தானாக சிக்னல்களை உருவாக்காது. அதன் பின் பிரதிபலிக்கப்பட்ட சிக்னல்களில் தகவல்கள்
அச்சிடப்படகின்றது. இவ்வாறு செய்யும் போது அதிக சக்தி தேவையில்லை என்று டாங் தெரிவித்துள்ளார்.
கருவிகளின் பேட்டரியை பத்திரமாக வைக்க என்ன செய்ய செய்ய வேண்டும்.
இதில் இருக்கும் பெரிய பிரச்சனையே பிரதிபலிக்கப்படும் சிக்னல்கள் தனிமைப்படுத்தப்படும்
போது தான் ஏற்படுகின்றது. இதன் காரணமாக தயாரிக்கப்பட்ட விசேஷ ரவுட்டர், சிக்னல்களை
அனுப்புவதோடு பிரதிபலிக்கப்படும் சிக்னல்களை அவை புரிந்து கொள்ளும் என்றும் இதன் மூலம்
நொடிக்கு அதிகபட்சம் 330 மெகாபைட் வேகத்தில் ஃபைல்களை பறிமாறி கொள்ள முடிந்தததாக டாங்
மற்றும் அவரது குழுவினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment