செல்வன்: கங்காதரன் குமாரதாஸ்(தாஸ்)
சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும் யாழ் நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்வன்: கங்காதரன் குமாரதாஸ்(தாஸ்) அவர்கள் இன்றையதினம்(திங்கள்கிழமை 20.04.2015) இயற்கை எய்தினார்.
அன்னார் கங்காதரன் கமலாதேவி ஆகியோரின் அன்பு புதல்வரும், அமரர் தமோதரம்பிள்ளை, சின்னமணி(பழமுதிர்ச்சோலை), அமரர்களான செல்லத்துரை,மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் பேரனும்,
சதிஸ்வரதாஸ், சாஜிதாஸ்(கனடா), கஜானி ஆகியோரின் அன்பு சகோதரரும்,வாணி அவர்களின் மைத்துனரும்.
கதாதரன், பாஸ்கரன், மனோகரன்(சுவிஸ்),கருணாகரன்-கருணா(பிரித்தானியா), சியாமளா(கொழும்பு), ஜனார்த்தனன்-ஜனா(பிரித்தானியா), அமரர் கிருபாகரன், தயாபரன், ஹரிகரன்(கொழும்பு) ஆகியோரின் பெறாமகனும்,
லக்ஸ்மிகாந்தன்(கனடா),ராதாகாந்தன்(கொழும்பு), ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரது இறுதிகிரிகைகள் இன்றையதினம் இடம்பெற்று யாழ் இந்து மாயாணத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்.

No comments:
Post a Comment