சோளங்கன் கலையிரவு நிகழ்வினை கனடா ரொறன்ரோ நகரில் இவ்வாண்டு நத்தார் விடுமுறையின்போது நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சோளங்கன் வாழ் மக்களுடனான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 15.11.2014 (சனிக்கிழமை) மாலை ஸ்காபுரோவில் நடாத்துவதற்கு எண்ணியுள்ளோம்.
கலையிரவானது முற்று முழுதாக நம் மண்ணின் கலை நிகழ்வாகவும், நமது ஊரின் வாசம் வீசும் வகையில் நமது பிள்ளைகளை கொண்ட கலை நிகழ்வாகவே அமையும்.
அந்த வகையில் உங்களது பிள்ளைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருந்தால் அதனையும் எமக்கு அறியதரலாம். தமிழ் பேச்சு, பாட்டு, பரதநாட்டியம், நாடகம், கிராமியகூத்து, வில்லிசை, சினிமா பாடல்களிற்கான நடனம் என்று எந்தவகையான கலை படைப்பாக இருந்தாலும் எமக்கு அறியத்தாருங்கள்.
அல்லது உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்த விரும்பினாலும் எமக்கு முற்கூட்டியே அறியத்தாருங்கள்.
ரூபன்:647-5374172
பிரபு:416-8781427
ரவி:416-8250964
மின்னஞ்சல் முகவரி: cholangan@gmail.com
நமது கிராமத்தின் பெயரை கனேடிய மண்ணிற்கு கொண்டு சென்றும், இன்னும் மண்ணின் மணம் மாறாமல் எமது ஊரின் நினைவுகளோடு தங்கள் இளவயதில் தொடரும் பணி தொடர எனது வாழ்துக்கள்.....
ReplyDeleteதறுமன் டென்மார்க்