Thursday, October 30, 2014

கனடாவில் சோளங்கன் கலையிரவு!!!

சோளங்கன் கலையிரவு என்ற பெயரில் நமது ஊரின் மக்களை ஒன்றுதிரட்டி குளிர்கால கலையிரவு ஒன்றினை நடாத்துவதற்கு சோளங்கன் வாழ் கனடா இளைஞர்கள் சிலர் எண்ணியுள்ளனர்.

இவ் கலையிரவின் நோக்கம் கோடைகாலத்தில் நிகழ்த்தப்படும் நுணுப்பாவளை ஒன்றுகூடலுக்கு பாதகம் இல்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், இது குறித்து நமது உறவுகளுடன் தொடர்புகொண்டு சிறந்ததொரு முடிவை எட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் கலையிரவின் மூலம் தினந்தோறும் நாம் மறந்து கொண்டுவரும் ஊரின் நினைவுகளை மீட்டு நமது மொழி, கலை,பண்பாட்டு விழுமியங்களை முன்னெடுக்கும் நோக்குடன். நமது வருங்கால சந்ததியினரை ஒன்றிணைத்து கலையிரவு ஒன்றினை நடாத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ் செய்தி குறித்து மின்னஞ்சல் ஒன்றின் மூலம் எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது. இது குறித்த உங்களது எண்ணங்கள், கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment