Saturday, March 1, 2014

ஈழத்து கலைஞர் 'அண்ணை றைற்' புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் காலமானார்!

ஈழத்து மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ்.பாலச்சந்திரன் கடந்த புதன்கிழமை(26.02.2014) அன்று கனடாவில் காலமானார்.
 
 
கரவெட்டியை பிறப்பிடமாகவும் இணுவில், கொழும்பு, கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கே.எஸ்.பாலசந்திரன் சுகயீனமுற்ற நிலையில் காலமானார்.
 
இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளில் மிகச்சிறந்த நைகைச்சுவை நாடகமான அண்ணை றைற், தணியாத தாகம், வாத்தியார் வீட்டில் போன்ற பல்வேறு வானொலி, மேடை நாடகங்களிலும் உள்ளூர் திரைப்படங்களிலும் நடித்த மிக நகைச்சுவை கலைஞர்களில் கே.எஸ் பாலசந்திரனும் ஒருவராவர்.

வருமானவரி இலாகாவில் பணியாற்றிய கே.எஸ் கனடாவிற்கு இடம்பெயர்ந்த நிலையிலும் கனடாவிலும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார்.

அன்னாருக்கு எமது மண்ணின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
இறுதிகிரிகைகள் பற்றிய விபரங்கள்:
 
பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு,
மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும்.

No comments:

Post a Comment