நெல்லியடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்க்கபட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
நெல்லியடியை சேர்ந்த 50வயதுடைய சுப்பிரமணியம் பேரின்பராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தர் ஆவார்.
நெல்லியடி எரிபொருள் நிலையத்திற்கு அருகே உள்ள தனது வீட்டில் உள்ள மாமரத்திலேயே இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலத்தை மீட்ட நெல்லியடி பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்காக மந்திகை அரசினர் வைத்திசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவ் சம்பவம் கொலையா தற்கொலையா என்ற விசாரணையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment