Thursday, November 22, 2012

எறும்புகளின் தந்திரோபாயம்!

சின்னஞ்சிறு பிராணிகள் கொண்டுள்ள நுட்பமான செயல்களை அறிந்தால் உண்மையிலேயே நாம் வியந்து போவோம்.  எறும்புகளில் கூட நாம் அறிந்துகொள்ள வேண்டிய பலவிதமான செயற்பாடுகள் இருக்கின்றன.
 
ஏபிட்டுகள் என்று சொல்லப்படும் சின்னஞ்சிறு பிராணியொன்று இருக்கிறது. இது சிலவகை இலைகளின் சாற்றை மட்டுமே உட்கொள்ளக்கூடியது.
ஆனால் அந்த வகை இலையை நோக்கி ஏபிட்டுகளை சுமந்து செல்வதற்கு எவராவது உதவி புரிய வேண்டும்.
 
அந்த உதவியை எறும்புகள் செய்கின்றன. எறும்பு அங்குமிங்கும் தேடி ஏபிட் ஒன் றைக் கண்டுபிடித்ததும் அதனைச் சுமந்தபடி குறித்த இலைக்குச் செல்கிறது. அதன் பின்னர் இலையின் சாறு ஏபிட்டுக்குக் கிடைக்கிறது.
 
அதுசரி... ஏபிட்டுகள் மீது எறும்புகளுக்கு ஏன் இத்தனை அக்கறை?
 
அதுதான் சுயநலம்... ஏபிட்டுகள் இலையின் சாற்றை உட்கொள்ளும் போது வெல்லத்தை (இனிப்பு) வெளியேற்றுகின்றன. இந்த வெல்லத்தை எறும்புகள் உண்ணுகின்றன. வெல்ல உணவுக்காக எறும்புகள் கொண்டுள்ள தந்திரோபாயம் அது!

No comments:

Post a Comment