Tuesday, November 13, 2012

கெளரிகாப்பு, ஸ்கந்தசஷ்டியுடன் இன்று தீபாவளித் திருநாள்

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இக பர சுகத்தை நல்குவதும் கெளரியம்பாள் நோன்பிருந்து சிவபெருமானின் இடப்பாகத்தை தனதாக்கிக்கொண்ட மகிமை பெற்றதுமான கேதார கெளரி விரதத்தின் இறுதி நிகழ்வான கெளரிகாப்பு வழங்கும் தெய்வீக நிகழ்வு, முருகப் பெருமானுக்குகந்ததும் விரதங்களில் மிக சிறப்புமிக்கதுமான ஸ்கந்தசஷ்டி விரதாரம்பம் மற்றும் அமாவாசை விரதம், தீபாவளி திருவிளக்குப் பூஜை என்பன ஒருங்கே அமையப்பெற்ற மிக சிறப்புவாய்ந்த தினமாக இன்றைய நாள் அமையப் பெற்றுள்ளது.
 
இத்தனை சிறப்பு வாய்ந்த தெய்வீக நிகழ்வுகளுடன் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற அதேநேரம், சகல சிவாலயங்களிலும் 21 நாள் நோன்பிருந்து, இவ்வாண்டுக்கான கெளரிகாப்பு பெறுகின்ற தெய்வீக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

சகல முருக தலங்களிலெல்லாம் இன்று மாலை ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகி எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சூரசம்ஹாரம் இரவு பிரம்மஹத்தி தோஷ - சஷ்டி பூசையும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் திருவூஞ்சல் என்பன நிகழவுள்ளன.

No comments:

Post a Comment