வசிஷ்டர், வியாசர் வழிவந்த ஆசாரியர்; உலகிற்குப் புது வேதாந்தம் உரைத்தவர், மக்களின் பசியைக் கண்டு கண்ணீர் உகுத்தவர். அவர்களின் பசி, நோய் நீக்குவதே மதம் என்று போதித்தவர். மக்களின் சேவைக்காக, சமயங்களின் ஒற்றுமைக்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் துறவிப்படையை உருவாக்கியவர். யார் இவர்? பாரத அன்னையின் தவப்புதல்வன் சுவாமி விவேகானந்தர் தான் அவர்.
2013 ஆம் ஆண்டு இம்மாமனிதரின் 150வது பிறந்த ஆண்டு! ஒவ்வோர் குடிமகனும் பெருமைப்பட வேண்டிய நான், சுவாமிஜியின் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய காலம் இது.
இதற்கான பல ஏற்பாடுகள் செய் யப்பட வேண்டும். இந்தப் பொறுப்பு இன்றைய மாணவர்களை ஆசிரியர் களை, பாடசாலை- கல்லூரிகளை சாரும். எனவே என்னென்ன முறை களில் இம்மாபெரும் பொறுப்பை, பணியைச் செயலாக்க வேண்டும் என் பதை சிந்திக்க வேண்டிய காலம் இது.
பாடசாலை கல்லூரிகளில் பிரார்த் தனை நேரத்தில் தினமும் சுவாமிஜியின் ஒரு கருத்தைக் கூற வேண்டும் எல்லா மாணவ, மாணவியர்க்கும் அந்த வாய்ப்பைத் தரலாம்.
சுவாமிஜியைப் பற்றிப் படித்த மாணவர்களைக் கொண்டே கிராமத்து மாணவர்களிடம் அதைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்ய வேண்டும்.
சுவாமிஜியின் வரலாற்றைப் பாடசாலைகளில், கல்லூரிகளில் அவ்வப்போது திரையிட வேண்டும்.
தேசிய அளவில் விவேகானந்தரது பெயரில் விருதுகளை அறிவித்துச் சிறப்பானவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
பாடசாலை, மற்றும் கல்லூரி களில் சுவாமிஜியின் 150வது பிறந்த ஆண்டின் போது சிறப்பு மலர்களை வெளியிட வேண்டும். பத்திரிகைகளில் சிறப்பு மலர் களை வெளியிட வேண்டும்.
விவேகானந்தரின் பிறந்த நாளில் கட்சி சார்பின்றி, மதச் சார்பின்றி கூட்டம் நடத்தி அவரது அறிவுரைகளை விளக்க வேண்டும்.
மாவட்டங்களிலும் பிரதேசங்களிலும், பிரதேச செயலாளர் போன்றவர்களின் தலைமையில் மதச்சார்பின்றி கூட்டங்கள் நடத்தி சுவாமியின் கருத்துக் களை விளக்கலாம்.
தேசிய இளைஞர் தினத்தில் பாடசாலைகளிலும் கல்லூரி களிலும் சிறப்புக் கூட்டமும், பல்வேறு போட்டிகளும் நடத்தி வென்ற வர்களுக்குப் பரிசுகள் வழங்கலாம்.
கிராமங்கள் தோறும் விவேகானந்தர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும் வாரந் தோறும் விவேகானந்தரின் அமுதம் என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடலாம்.
சுவாமிஜியின் கருத்துக்களை அறிஞர்கள் மற்றம் துறவிகள் மூலம் சொற்பொழிவு ஆற்றச் செய்யலாம்.
சுவாமி விவேகானந்தர் தொடர்பான தகவல்களில் சிலவற்றை இங்கு நோக்குவது மிகவும் பொருத்தமாகும்.
ஆங்கிலேயர்கள் உயர்ந்த இனத்தைச் சார்ந்தவர்கள்; கலாசாரத்தில் சிறந்தவர்கள்; ஆகவே இந்தியாவை ஆழத் தகுத்தவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை மக்களிடையே குறிப் பாக புதிய வேலைக்கல்வி கற்ற வர்களிடையே இருந்த காலம் அது.
மக்களின் மனங்களில் இத்தகைய அடிமை மனப்பான்மையைத் தோற்றுவிப்பதே ஆதிக்க வெறியின் மோசமான வெளிப்பாடு. பரதத்தின் ஒளி மிகு வரலாறு கேலிக்கு உள்ளாகியது. பண்பாட்டு விழுமியங்கள் மோசமாக விமர்சிக்கப்பட்டன.
இத்தகைய ஓர் இறுக்கமான கால கட்டத்தில் தான் சுவாமிஜி சிங்கம் போல் சீறி இந்தியர்களை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பினார்.
'தாய்நாட்டின் பெருமையையும் மக்களின் இரத்த நாளங்களில் செலுத்தினார். தமது வாக்கின் மூலம் இள நெஞ்சங்களைக் கனன்று எழச் செய்தார்.
"தாய் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய நீங்கள் தயாரா? அப்படி என்றால் வறுமையையும் அறியாமை யையும் இந்த நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற்றி விடலாம்" உங்கள் குறிக்கோளை அடையும் மனவுறுதி உள்ளதா? உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை இருந்து விட் டால் நாம் சுதந்திர மனிதர்கள் ஆக முடியும். நல்ல உறதியான உடலை வளர்க்க வேண்டும். கல்வியாலும் மன ஒருமைப்பாட்டாலும் உங்கள் மனதை , பண்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்." இவையே சுவாமியின் போதனைகளாகும்.
சுவாமிஜி ஓர் அரசியல் வாதியோ இந்தியப் போரா ட்டத்தில் செயல் பட்டவரோ அல்ல என்றாலும் தமது கருத்துக்கள் இலட்சியங்கள் மூலம் தேசிய உணர்விற்கான எழுச்சியையும் ஊக்கத்தையும் அளித்தவர்களுள் மிகச் சிறந்தவர்!
சுவாமி விவேகானந்தர் வழக்கமான ஆன்மிகத் தலை வராக அல்லாமல் சுதந்திரப் போராட்டத்திற்கு முந்திய மற்றும் பிந்திய சந்ததியினரின் ஒட்டுமொத்த கற்பனைகளையும் கனவுகளையும் கவர்ந்தார்.
பிரிவினைவாதம், தீவிர வாதம், பயங்கர வாதம். இராணுவ ஆட்சி போன்ற மாறுபட்ட தத்துவங்களால் அச்ச றுத்தப்படும் இன்றைய உலகிற்கு சகிப்புத்தன்மை, இணக்கம், பரஸ்பரம், ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய சுவாமிஜியின் செய்திகளே நல்ல வழிகாட்டியாக அமைகின்றன. அவரது சிந்தனைகள் இளைஞர்களின் மனங்களில் பதியக் காரணம் அவரது நவீனத்துவம் நிறைந்த உலகக் கண்ணோட்டம் ஆகும்.
தொழில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் தோன்றும் புரட்சிகரமான வளர்ச்சிகளின் ஆற்றலை சுவாமிஜி ஆழ்ந்து புரிந்து கொண்டு வரவேற்றார். ஏனெனில் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை என அவர் உணர்ந்தார்.
சுவாமிஜி இளைஞர்களை முழு நம்பிக்கையுடன் பயமின்றிச் செயற்பட ஊக்குவித்தார். ஆன்மிக பலத்தைப் போற்றிய அவர் உடல் மனம் போன்ற பிற சக்திகளையும் அலட்சியம் செய்யக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment