Saturday, October 13, 2012

புரட்டாதி சனி நிறைவு நாள் விசேட பூசைகள்

புரட்டாதி மாத சனி விரத நிறைவு நாள் இன்று சகல இந்து ஆலயங்க ளிலும் விசேட பூசைகள், யாகங் கள் நடத்தப்படு கின்றன.
 
ஏனைய வருடங்களைப் போல் அல்லாது இம்முறை புரட்டாதி மாதம் மிகவும் விசேடமானது. சனி பகவான் வர்க்கோத்தமம் ஆனதால் மிகவும் விசேடமாக கருதப்படுகிறது.
 
நவக்கிரகங்களில் ஈஸ்வரப்பட்டம் பெற்ற சனி பகவான் கடந்த 2012.09.12ம் திகதி கன்னி இராசியில் இருந்து துலா இராசிக்குப் பிரவேசித்தார். இவர் சுமார் இரண்டரை வருட காலம் இருக்கப் போகிறார். இவர் நவக்கோளாகிய ஒன்பது கிரகங்களிலும் பன்னிரெண்டு இராசி களிலும் மாறி, மாறி நின்று தாக்கம் புரிகிறார்.

இத்தாக்கங்களில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் பெறுவதற்கு சனீஸ்வரனை வழிபட ஒரு சிறப்பான நாளாக இது அமைவதன் காரணத்தால் இவ் சனிக் கிரக பெயர்ச்சி தோஷ நிவர்த்தி மஹா யாகம் நடைபெற வுள்ளது. சனிப்பெயர்ச்சி தோஷ இராசிகளாக கன்னி, துலாம் விருச்சிகம், மீனம், கடகம் என்பனவும் மத்திம பலன் இராசிக ளாக - மேடம், மிதுனம், மகரம், கும்பம் என்பனவும் சிறப்பு இராசி களாக இடபம், சிம்மம், தனு அமையப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment