Wednesday, September 19, 2012

கல்லுவம் கிராமத்தின் இணைய அறிமுகம்

சோளங்கன் கிராமத்திற்கு அயல் கிரமமான கல்லுவம் கிராமத்தின் இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கத்தினை நிர்வகித்துள்ள அவ்வ+ர் மக்கள் தமது கிராமத்தின் செய்திகள், தகவல்களை தாங்கிய வகையில் இணையத்தளம் ஒன்றினையும் அறிமுகம் செய்துள்ளனர். அவ்வ+ர் இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இணையத்தளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் பேஸ்புக், ரிவிட்டர் என்று பொழுதை போக்கும் நிலையில், இந்த இளைஞர்களின் முயற்சியும் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையையும் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். யாழ்மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கலாச்சார சீரழிவுகளிற்கு இசைவுகொடுத்து இளைஞர்கள் தவறான பாதையில் செல்கையில், சமூகத்தின் மீதும், தாம் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதும் பற்றுக்கொண்ட இளைஞர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கமும் அதில் அங்கம் வகிக்கும் இளைஞர்களின் செயற்பாடுகளும் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. கல்லுவம்  இணையத்திற்கு இங்கே அழுத்தவம்

-சோளங்கன் இணையம்.

No comments:

Post a Comment