Thursday, August 9, 2012

முப்பது வயதில் தான் மனமுதிர்ச்சி வருகிறது

ரீன் ஏஜ் முடிந்து 21 வயது நிரம்பினால் பெரிய ஆளாகிவிட்டதாக காலம் காலமாகக் கூறப்படுகிறது. ஆனால் 21 வயதானாலும் இன்னும் குழந்தைப் பருவம்தான் என்றும் 30 வயது ஆனால்தான் மனமுதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் அறக்கட்டளை மன முதிர்ச்சி குறித்து ஆய்வு நடத்தியது.
 
இதில் 21 வயது நிரம்பியவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது 21 வயது என்பது விருந்து கொண்டாடும் வயது. மகிழ்ச்சியாக இருக்கும் வயது என்றுதான் பதில் வந்தது. குழந்தைப் பருவத்தில் இருந்து முழு மனிதனாக மாறும் கால கட்டம் அதுவல்ல. படிப்பு முடித்து சம்பாதிக்க தொடங்கி திருமணம் செய்துகொண்டு சுயமாக முடிவெடுக்கும் காலம் 30 வயதுதான்.
 
21 வயது வந்து விட்டாலே குழந்தைப் பருவம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment