மைக்ரோவேவ் ஓவனில் 6 மாதக் குழந்தையை வைத்து கொன்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
29 வயதான கா யாங் கலிபோர்னியா தலைநகர் சேக்ரமென்டோவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
எந்த நோக்கத்துடன் அவர் இதைச் செய்தார் என்று தெரியவில்லை. கொலைக்குற்றச்சாட்டின்கீழ் அந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் தீக்காயங்கள் விவரிக்க முடியாத அளவு இருந்தன என்று சேக்ரமென்டோ போலீஸார் தெரிவித்தனர்.
மைக்ரோவேவ் ஓவனில் வைக்கப்பட்டதைப் போன்று தீக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து தடயவியல் வல்லுநர்களின் ஆலோசனையைக் கோரியிருக்கிறோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment