வடமராட்சி வல்லைவெளியில் இன்றுமாலை 3:30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை வடமராட்சி நெல்லியடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சையிக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வல்லைவெளியில் உள்ள மின்கம்பத்துடன் மோதியது.
இதன்போது ஒருவர் மின் தூணுக்குள் இருந்தும், மற்றையவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், 23வயதுடைய இ.தேவமைந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், சோமசுந்தரம் விஜயரத்தினம் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த விபத்திதினை தொடர்ந்து வடமராட்சி பகுதிகளிற்கான மின்சாரம் மாலை 3;30 மணியில் இருந்து தடைப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment