அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவழி நல்வாழ்த்துக்கள்! இன்றைய நாளில் தீயவை அகன்று நல்லவையை சிந்தையில் கொண்டு தீத்திக்கும் தீபாவழியாக நாம் கொண்டாடுவோம் என்று கூறி அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இன்றைய நாளில் நமது மண்ணில் நாம் இருந்திருந்தால் பட்டம் விட்டும், பட்டாசு கொழுத்தியும் மகிழ்வுறும் இன்நாளில் புலம்பெயர் தேசத்தில் எம்மால் பசுமையான நிகழ்வுகளை கைக்கொள்ள முடியாவிட்டாலும், நம் சிறார்களிற்கு புத்தாடை அணிவித்தும் ஆலயங்களிற்கு சென்றும், இனிப்பு பண்டங்களை பரிமாறியும், சுவையான உணவுகளை அருந்தியும் நண்பர்களுடன் ஒன்றுகூடி தீபவழிநாளில் மகிழ்கின்றோம்.
இன்றைய நாள் எம் போன்ற சிறார்கள் மகிழ்வுடன் பட்டாசு கொழுத்;தியும் வானவெடிக்கை மேற்கொண்டும், பட்டம் விட்டும் மகிழ்வுறும் நாளாகவும் இருக்கும். நம் தேசத்தில் இன்று விடுமுறை நாளாகும். புலம்பெயர் தேசத்தில் வேலைக்கு ஒய்வு கிடைக்காவிட்டாலும் பிள்ளைகளுடன் மகிழ்வுற்று இந்த தீபவழி நாளை கொண்டாடுகின்றோம்.
நாடு விட்டு நாடு தாவியும் நமது கலை, கலாச்சார விழுமியங்களை இன்றுவைர கட்டிக்காக்கும் நம் தமிழர் பண்பாடு சிறந்து விளங்குவது மகிழ்வுக்குரியது என்று கூறி, அனைவரும் "ஒன்றுபட்டு உழைத்தால் நம் ஊர் சிறப்புறும்" ஆகவே "எமக்குள் உள்ள ஏற்ற தாழ்வுகளை மறந்து நாம் சோளங்கன் மண்ணின் உறவுகள்" என்ற உயர்வான சிந்தனையோடு செயற்பட்டால் நம் ஊரும், நம் உறவுகளும் மேலும் ஆனந்தமடைவார்கள் என்று கூறி அனைவருக்கும் எமது தீபாவழி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

No comments:
Post a Comment