எமது அன்புத்தெய்வப்பெருமனார், திரு.ச.தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆடி மாதம் 4ம் திகதி(20.07.2010) செவ்வாய்க்கிழமை அன்று அருட்பெரும் ஜோதியுடன் கலந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி சபாபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் இளையமகனும், சின்னமணியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், கங்காதரன், கதாதரன், பாஸ்கரன், மனோகரன், கருணாகரன், சியாமளா, ஜனார்த்தனன், காலஞ்சென்ற கிருபாகரன், தயாபரன், ஹரிகரன் ஆகியோரின் அன்புத்தந்தையும், இரங்கநாதன், கமலாதேவி, வாசுகி, சரோஜாதேவி, ராணி, சண்முகாஞ்சலி, அனுஜா, பிரமிளா, கெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும் குமரதாஸ், சதீஸ்வரதாஸ், சாயிதேவதாஸ், கஜானனி, அமிர்தசொரூபன், சாந்தரூபன், துர்ஷியா, டூரதர்ஷினி, கஜனி, சுவேதன், ஆதினன், அனோயா, அஜந்திகா, ரம்மியா, கபில்நாத், கீர்த்திகா, கெளசல்யா, கிருஷாணி, அபூர்வா ஆகியோரின் அன்புப்பேரனும் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவகுருநாதன், விஜயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்லத்துரை, ஆறுமுகம், திருநாவுக்கரசு மற்றும் கதிரிப்பிள்ளை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்புத்தெய்வத்தின் ஆத்மசாந்தி நிகழ்வுகளான எதிர்வரும் புதன் கிழமை(18.08.2010) அன்று காலை 9.00 மணியளவில் "கல்லு" சாந்திப்பூஜையும் தொடர்ந்து மறுநாள்(19.08.2010) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் தெய்வீகம் நிறைந்த ஆத்மசாந்திப்பிரார்த்தனைப் பூஜைகளும் "பக்தி மணிமாலை" மலர் வெளியீட்டுடன் சபிண்டீகரணமும் மதியபோசனமும் "பழமுதிர்ச்சோலை"யில் நடைபெற உள்ளதால் அன்றய நிகழ்வுகளில் தாங்கள் பங்குகொண்டு நிறைந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். இதுவரைநாளும் தொடர்ச்சியாக எம்முடன் கலந்து நிறைந்து பலவழிகளிலும் ஆறுதல்கூறிய அன்பு நெஞ்சங்கள் எல்லோருக்கும் எம் உளமார்ந்த நிறைந்த நன்றிகள்.
இங்கனம்: வீ.எஸ்.தாமோதரம்பிள்ளை குடும்பத்தினர்.
"பழமுதிர்சோலை"
கரணவாய் மேற்கு,
கரவெட்டி.
தொ. இல: 021-2263918 (கரவெட்டி)
559692,865537,596171(கொழும்பு)
08-9248662,08-5036970(லண்டன்)
இங்கனம்: வீ.எஸ்.தாமோதரம்பிள்ளை குடும்பத்தினர்.
"பழமுதிர்சோலை"
கரணவாய் மேற்கு,
கரவெட்டி.
தொ. இல: 021-2263918 (கரவெட்டி)
559692,865537,596171(கொழும்பு)
08-9248662,08-5036970(லண்டன்)
No comments:
Post a Comment